எமது தூரநோக்கு
சமூகத்திற்கு பயனுள்ள வகையில் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த உதவும் மிகச் சிறந்த அரச நிறுவனமாகத் திகழ்தல்.எமது பணி
அரச கொள்கைகளுக்கு அமைவாக சேவைகளை வழங்குவதுடன், வளங்களின் முறையான ஒருங்கிணைப்பு மற்றும் மக்கள் பங்குபற்றலுடனான திட்டமிட்ட, வினைத்திறனான அபிவிருத்திச் செயன்முறையினூடாக சமூகத்தின் வாழ்க்கை முறையை மேம்படுத்துதல்.கேகாலை பிரதேச செயலகத்தின் வரலாறு
பழங்காலம் தொட்டே கேகாலை மலையகத்திற்கான நுழைவாயிலின் முக்கிய சந்திப்பாக இருந்து வருகிறது. களனிப் பள்ளத்தாக்கில் "ராஜ மாவத்தை" அமைந்திருந்ததாகவும், அது அரந்தறை மற்றும் ருவான்வெல்ல ஊடாக தீவெல, எவுனுகல்ல, ஹெட்டிமுல்ல ஆகிய கிராமங்களின் வழியே சென்றதாகவும் கூறப்படுகிறது. கொழும்பையும் கண்டியையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பிரதான வீதியுடன், போக்குவரத்து மையமாக கேகாலை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. கேகாலை நகரமானது கொழும்பு - கண்டி A1 பிரதான வீதியில் கொழும்பிலிருந்து 78 கி.மீ தூரத்திலும் கண்டியிலிருந்து 39 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
கேகாலை பிரதேசமானது வடக்கே இறம்புக்கனை பிரதேச செயலகப் பிரிவாலும், கிழக்கே மாவனல்லை மற்றும் அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவுகளாலும், தெற்கே புலத்கொஹுப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவாலும், மேற்கே கலிகமுவ பிரதேச செயலகப் பிரிவாலும் சூழப்பட்டுள்ளது. இது அட்சரேகை 7° 1' இற்கும் 7° 08' இற்கும் இடையிலும், கிழக்கு தீர்க்கரேகை 80° 19' இற்கும் 80° 22' இற்கும் இடையில் அமைந்துள்ளது.
கேகாலையின் நிலப்பரப்பில் 2000 அடி உயரத்தில் 120 ஹெக்டேயர் நிலமும், 500 - 1000 அடி உயரத்தில் 7777 ஹெக்டேயர் நிலமும் காணப்படுகின்றன. இங்கு பொதுவான வெப்பநிலை 25°C இற்கும் 27°C இற்கும் இடையில் காணப்படும்.
இப்பிரதேசத்தின் நீர் வடிநிலப் பகுதியானது, வடக்குச் சரிவில் அமைந்துள்ள மகா ஓயாவின் கிளை நதிகளான கேகலு ஓயா மற்றும் மாரப்பொன ஓயா ஆகியவற்றையும், களனி கங்கையின் முக்கிய கிளை நதியான குருங்கொடை ஓயா மற்றும் அதன் கிளை நதிகளையும் கொண்டுள்ளது.
கேகாலை என்ற பெயர் வலஹம்பா மன்னரின் காலத்தில் உருவானதாக நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன. மன்னர் வலஹம்பா தனது படைகளுடன் போருக்குச் செல்லும் வழியில் மதிய உணவு உண்பதற்காக ஒரு பாறையின் மீது ஓய்வெடுத்துள்ளார். அவர் தனது பயணத்தை மீண்டும் தொடங்கிய போது, பாக்கு வெட்டுவதற்காக பாக்குவெட்டியைத் தேடியுள்ளார். எனவே, பாக்குவெட்டி 'பத் கே கல' (மதிய உணவு உண்ட பாறை) மீதே விடுபட்டிருக்கலாம் எனக் கூறி அதனை எடுத்து வருமாறு ஒரு சேவகனை அவர் அனுப்பியுள்ளார். அந்த 'பத் கே கல' (Bath Ke Gala) இருந்த பகுதியே தற்போது கேகாலை (Kegalla) என அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தற்போதைய கிறிஸ்தவ தேவாலயமும் (கல் பள்ளி), மன்னர் வலஹம்பாவைக் கௌரவிக்கும் வகையில் பெயரிடப்பட்டுள்ள வலஹம்பா மகா வித்தியாலயமும் இந்த 'பத் கே கல' இற்கு அருகிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
முதலாம் பராக்கிரமபாகு மன்னரின் ஆட்சிக் காலத்திலேயே நிருவாகப் பகுதிகளை கோரளை மற்றும் பற்று என அடையாளப்படுத்தும் முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் எல்லைகள் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டிருந்த போதிலும், 1890 ஆம் ஆண்டில் பெலிகல் கோரளை, கினிகொட கோரளை, கல்பொட கோரளை மற்றும் பரணகுரு கோரளை ஆகியவற்றை உள்ளடக்கிய 'சதரகோரளை' (நான்கு கோரளைகள்), சப்ரகமுவ மாகாணத்தின் ஒரு தனிப் பிரிவாக திட்டவட்டமான எல்லைகளுடன் பெயரிடப்பட்டது.
பிரித்தானியர் ஆட்சியின் கீழ், வடக்கு மாவத, தெற்கு மாவத, தேயால தஹமுன மற்றும் கந்துஅஹ ஆகிய பற்றுக்களை உள்ளடக்கிய பரணகுரு கோரளையானது, பிரதேச இறைவரி அதிகாரியிடம் (பரணகுரு கோரளை இறைவரி அதிகாரி) கையளிக்கப்பட்டது.
1972 ஆம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்பின் கீழ், நிருவாக எல்லைகளில் எவ்வித மாற்றமுமின்றி, பதவிப் பெயரில் மாத்திரம் மாற்றத்தை ஏற்படுத்தி கேகாலை உதவி அரசாங்க அதிபர் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கமைய, பிரதேச இறைவரி அதிகாரி என்ற பதவிப் பெயரானது உதவி அரசாங்க அதிபர் எனத் திருத்தம் செய்யப்பட்டது. 1992 ஆம் ஆண்டில் கேகாலை உதவி அரசாங்க அதிபர் பிரிவானது, 'பிரதேச செயலகப் பிரிவு' என மீளப் பெயரிடப்பட்டதுடன், தற்போது இது 61 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் 146 கிராமங்களையும் கொண்டுள்ளது.
கேகாலை பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு 106.86 சதுர கிலோமீற்றர்கள் (10,586 ஹெக்டேயர்கள்) ஆகும். இங்கு நெல், தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை ஆகியவை பிரதான பயிர்களாகக் காணப்படுவதுடன், காப்பி, கொக்கோ, மிளகு, கராம்பு மற்றும் பாக்கு போன்ற சிறு ஏற்றுமதிப் பொருட்கள் வீட்டுத்தோட்டப் பயிர்களாகவும் பயிரிடப்படுகின்றன. இப்பிரதேசத்தில் 334.6 ஹெக்டேயர் பரப்பளவில் ஒதுக்கப்பட்ட காடுகளும், 207 ஹெக்டேயர் பரப்பளவில் பற்றைக் காடுகளும் அமைந்துள்ளன.
Role performed at DS
| Name | From | To | Designation |
| Mr. D.B.Basnayaka | 1948 | 1953 | Divisional revenue officer |
| Mr. T.B.M.Ekanayaka | 1953 | 1958 | Divisional revenue officer |
| Mr. Wimalarathne Kumaragama | 1958 | 1962 | Divisional revenue officer |
| Mr. Wijerathne Puwakmote | 1962 | 1966 | Divisional revenue officer |
| Mr. K. Neduratha | 1966 | 1968 | Divisional revenue officer |
| Mr. J.B.Daulagala | 1968 | 1982 | Assistant Government Agent |
| Mr. B.U.Bokalamulla | 1982 | Three months | Assistant Government Agent |
| Mr. K.A.Darmadasa | 1982 | 1992 | Assistant Government Agent |
| Mr. A.W.Abesekara | 1992 | 1997 | Divisional Secretary |
| Mr. D.M.M.Dissanayaka | 1997 | 2001 | Divisional Secretary |
| Mr. Mahinda Senevirathne (acting) | 2001 | 2002 | Divisional Secretary |
| Mr. W.M.R.B.Wijekoon | 2002 | 2009 | Divisional Secretary |
| Mr. L.A.P.U.Liyana arachhi | 2009 | 2013.01.14 | Divisional Secretary |
| Mrs. H.T.R.N.Piyasena | 2013 | 2018.08.04 | Divisional Secretary |
| Mr. K.G.S. Nishantha | 2018.09.13 | 2023.11.22 |
Divisional Secretary |
| Mrs.M.M.P.Priyangani Pethangoda | 2024.01.01 | Onwards | Divisional Secretary |
















